இத்தாலியில் புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா…… அச்சத்தில் மக்கள்

0

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் பட்டியலில் இத்தாலி தற்போது 8-வது இடத்தில் உள்ளது.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 902 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 81 ஆயிரத்து 368 ஆக உள்ளது.

ஒரே நாளில் 318 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 103 என தெரிய வந்துள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கண்டறியப்படாத தாய்லாந்தில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றை இத்தாலியில் கண்டறிந்துள்ளனர்.

எகிப்தில் இருந்து இத்தாலிக்கு திரும்பிய நபரிடமே குறித்த தாய்லாந்தில் உருமாற்றம் கண்ட தொற்றானது அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பிலான ஆய்வில் இத்தாலிய சுகாதார அமைப்புகள் முனைப்பு காட்டி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here