இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் பிரதமரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

0

எதிர்காலத்தில் இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு, இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர், இத்தாலியில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத்தருமாறு, இத்தாலி வாழ் இலங்கையர்கள் பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர்.

இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று போலோக்னா நகரில் நேற்று(14) இடம்பெற்றது.

குறித்த முன்மொழிவு தொடர்பில் இத்தாலி அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு, அந்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் எதிர்வரும் சில தினங்கள் அங்கு இராஜதந்திர சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here