இத்தாலிக்கான விஜயத்தை ஆரம்பித்தார் மஹிந்த

0

இத்தாலிக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (10) ஆரம்பித்தார்

பிரதமர் தலைமையிலான குழு, இன்று காலை இத்தாலி நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் கலந்துக்கொள்ளும் நோக்கிலேயே, பிரதமர் தலைமையிலான குழு, இத்தாலி நோக்கி பயணித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது வத்திக்கானில் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் ஆண்டகையை, பிரதமர் மஹிந்த ராஜப்ஸ சந்திக்க மாட்டார் என பிரதமர் அலுவலகம் அண்மையில் ஊடக அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here