இதுவும் கடந்து போகும்… நயனுக்கு தெம்பு கொடுக்கும் சித்!

0

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்து விட்டது.

ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடிக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது நெற்றிக்கண் படக்குழு.

திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

‘இதுவும் கடந்து போகும்’ பாடலை பிரபல பிண்ணனி பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடலின் உருவாக்கம் தொடர்பான சில காட்சித்துணுக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. இதோ அந்த வீடியோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here