இதய அழற்சியை ஏற்படுத்தும் தடுப்பூசிகள்….! ஐரோப்பிய மருத்துவ முகாமை எச்சரிக்கை

0

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவ முகாமை கூறியுள்ளது.

இதயத்தில் வலி ஏற்படுவது, சுவாசம் இல்லாத தன்மையை உணர்வது, திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது இதயத் துடிப்பு சீரற்று இருப்பது போன்றவை அழற்சிகள் அறிகுறிகளாக காணப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து தங்களுக்கு இதய அழற்சி இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

இதய அழற்சி தொடர்புடைய மையோகார்டிட்டிஸ் மற்றும் பெரிகார்டிட்டிஸ் என்ற இரண்டு அறிகுறிகள் ஃபைஸர் மற்றும் மொடர்னா கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதால் ஏற்படுகின்றன.

இதய தசைகளில் அழற்சி ஏற்படுவது மையோகார்டிட்டிஸ் ஆகவும், இதயத்தில் இருக்கும் பெரிகார்டியம் பகுதிகளில் ஏற்படும் அழற்சி பெரிகார்டிட்டிஸ் ஆகவும் காணப்படுகின்றது.

ஃபைஸர் – பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 145 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 138 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது.

மொடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 19 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 19 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது என்று ஐரோப்பிய மருத்துவ முகமையின் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here