இணையத்தில் கொலை செய்வது எப்படி என தேடிய மனைவியால் கணவருக்கு நேர்ந்த கதி…!

0

.இந்தியாவில் மத்தியப்பிரதேச மாநிலம் Harda மாவட்டத்தைச் சேர்ந்த Tabassum என்ற பெண், தன்னுடைய கணவர் மர்மான முறையில் உயிரிழந்துவிட்டதாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

குறித்த விசாரணையில், Tabassum-ன் கணவர் மஹாராஷ்ட்டிராவில் வேலை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையில், Tabassum-க்கு இங்கு Irfan என்ற நபர் அறிமுகமாகியுள்ளார்.

குடும்ப நிதி நெருக்கடி காரணமாக Tabassum அவரிடம் நெருங்கி பழகியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா காலகட்டம் என்பதால், Tabassum-ன் கணவர் Harda-வுக்கு திரும்பியுள்ளார்.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள முடியவில்லை.

இதனால், அவர்கள் கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன் படி Tabassum இணையத்தில் கணவனை கொலை செய்வது எப்படி? அந்த உடலை அப்புறப்படுத்துவது எப்படி என்றெல்லாம் தேடியுள்ளார்.

அதன் பின், கணவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதால், அவருக்கு வழக்கமாக கொடுக்கும் மருந்தை கொடுக்காமல் வேறொரு மருந்தை சம்பவ தினத்தன்று கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக அவர் சுயநினைவை இழக்க, Tabassum வீட்டிற்கு Irfan வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து , அவரின் கை மற்றும் கால்களை கட்டிய இவர்கள், அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளனர்.

பொலிஸார் அவரின் போன் அழைப்புகளை ஆராய்ந்த போது, அவர் Irfan-யிடம் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது.

அதன் பின்னரே பொலிசார் தங்கள் பாணியில் விசாரிக்க, இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 18-ஆம் திகதி நடந்துள்ளது.

குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைத்துவிட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here