இணையத்தளத்தில் கொள்வனவு தொடர்பில் அவதானம்…! பொலிஸார் வேண்டுகோள்

0

இணையத்தளம் ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்யும் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இணையத்தில் விற்பனைக்குள்ளாகும் பொருட்கள் திருடப்பட்டது அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் என தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பெறுமதியான கையடக்க தொலைபேசி, தங்க நகைகள், வாசனை திரவியங்கள், கண்ணாடி உபகரணங்கள் ஆகியவை குறைந்த விலையில் வழங்குவதாக இணையத்தளம் ஊடாக விளம்பரங்கள் வெளியிட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நிறுவனங்களின் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மக்கள் நடமாட்டம் குறைவான மற்றும் சீசீடீவி கட்டமைப்புகள் இல்லாத இடங்களை தெரிவு செய்துக் கொள்கின்றனர்.

அங்கு அவர்கள் பொருட்களை விற்பனை செய்தவுடன் காணாமல் போய்விடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here