கொரோனா தொற்றால் இணுவில் ஆலயம் ஒன்றின் பிரதம குரு உயிரிழப்பு!

0

இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குரு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பிரதம குருவான உருத்திரமூர்த்தி குருவே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையிலேயே சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here