இங்கையில் கடந்த காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றது.
அதில் உந்துருளியில் பயணித்தவர்கள் அதிகம் உயிரிழந்துள்ளனர்.
அதனால் உந்துருளிகளை பிரதானமாக கண்காணிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் வீதி விதிமுறைகளை மீறி பயணித்த 4511 உந்துருளிகள் கையகப்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் மது போதையில் வாகனம் செலுத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.