இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அதிகரிக்கும் கருக்கலைப்புக்கள்!

0

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டுகளில் கருக்கலைக்கும் அளவுகள் அதிகரித்துள்ளது.

அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,15,000பேர் கருக்கலைப்புகள் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், அஞ்சல் மூலம் மாத்திரை பெரும் திட்டம் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது.

மருத்துவர்களை நேரில் சந்திக்க இயலாத பல பெண்கள் அந்த திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

அத்துடன் சுகாதார தரவுகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சர்கள் இந்த திட்டத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

பிரித்தானிய கர்ப்ப ஆலோசனை சேவையின் தலைவரான கிளேர் மர்பி, கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட கருக்கலைப்பு எண்ணிக்கையில் இந்த கொள்கை திட்டத்துக்குப் பங்கு இருந்திருக்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here