இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

இங்கிலாந்து மன்னராக 3ஆம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

73 வயதாகும் சார்லஸ் மன்னராவதற்கு அக்சசன் கவுன்சில் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

மகாராணி 2 ஆம் எலிசபெத் மறைவையடுத்து சார்லஸ் மன்னரானார்.

புனித ஜேம்ஸ் அரண்மனை நிகழ்ச்சியில் மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் டிரெஸ், முன்னாள் பிரதமர்கள் பங்கேற்றனர்.

ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து பல்வேறு நடைமுறை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘காட் சேவ் தி கிங்’ என தேசிய கீதத்தின் வரிகள் மாற்றியமைக்கப்பட உள்ளன.

‘‘காட் சேவ் தி குயின்’’ என பாடப்பட்ட நிலையில் தேசிய கீதத்தின் வரிகள் மாற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here