இங்கிலாந்து அணியை திணற வைத்த இந்திய அணி வீரர்கள்!

0

இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ரன்களில் ஆட்டமிழந்தது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் செய்த இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 183 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 13 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் தலா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here