இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நடராஜன் விளையாடுவதில் சிக்கல்!

0

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் அபாரமாக விளையாடிய நிலையில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டுள்ளது.

இப்போது நடராஜன் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பயிற்சியும், காயம் குணமடைவதற்கான மருத்துவ ஆலோசனையும் பெற்று வருகிறார்.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில் அதற்குள் நடராஜன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here