இங்கிலாந்தில் கல்மழை…. 30 நிமிடத்தில் நடந்த ஆச்சரியம்…

0

இங்கிலாந்தில் Leicestershireஇலுள்ள Kibworth Beauchamp என்ற கிராமத்தில் திடீரென வானிலை மாற, வானம் கருத்து கல்மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

படபடவென கண்ணாடி ஜன்னல்கள், கார் மற்றும் கார் கண்ணாடிகள் மீது சுமார் 5 சென்றிமீற்றர் அளவுள்ள பனிக்கட்டிகள் வந்து வேகமாக மோத அதனால் உருவான சத்தத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மழை 30 முதல் 45 நிமிடங்களுக்கு மழையும் கொட்டித் தீர்த்துள்ளது.

மழை விட்டபின் வெளியே வந்து பார்த்தால், பலரது கார் கண்ணாடிகளில் கீறல் விட்டுள்ளது.

காரின் பரப்பு முழுவதும் பனிக்கட்டிகள் மோதியதில் பள்ளம் பள்ளமாக ஆகிவிட்டிருக்கிறது.

இந்த கல்மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here