இங்கிலாந்தில் ஒரே நாளில் கோடீஸ்வரராகிய நபர்….

0

இங்கிலாந்தில் Hemyock வில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடிப் புறப்பட்ட ஒருவருக்கு தங்க நாணயம் கிடைத்துள்ளது.

அதன் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய, தற்செயலாக, லண்டனிலுள்ள நிபுணர் ஒருவர் கண்ணில் அந்த படம் பட்டிருக்கிறது.

அவர் அதை மதிப்பீடு செய்ய, அந்த தங்க நாணயத்தின் மதிப்பு சுமார் 400,000 பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.

இது போன்ற நாணயங்கள் இதற்கு முன் 500,000 பவுண்டுகளுக்கு அதிகமாக விற்பனையாகியுள்ளன.

குறித்த பிரித்தானியர் ஒரே நாளில் கோடீஸ்வரராகிவிட்டார்.

தனது பெயரை வெளியிட விரும்பாத அவர், தான் ஒரு அதிர்ஷ்டசாலி என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மன்னரான மூன்றாம் ஹென்றியின் உருவம் பொறிக்கப்பட்ட அந்த நாணயம், 1257ஆம் ஆண்டைச் சேர்ந்து.

இத்தகைய நாணயங்கள் வெறும் எட்டு மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அவற்றில் பெரும்பாலானவை அருங்காட்சியகங்களில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here