இங்கிலாந்தில் ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் புதிய மாறுபாடு….

0

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொவிட் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது.

ஒமைக்ரொன் என்று பெயரிடப்பட்ட அந்த வைரஸ் ஏனைய உருமாறிய வைரஸ்களைவிட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்றும் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது ஒமைக்ரொன் வைரசில் இருந்து உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒமைக்ரொன் வைரசின் துணை திரிபான பிஏ-2 வைரஸ் கண்டறியப்பட்டது.

அந்த வைரஸ் சமீபத்தில் பரவத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரொனின் புதிய துணை மாறுபாடான பிஏ-2 வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாறுபாடு தொடர்பாக இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

பிஏ-2 வைரஸ் டென்மார்க்கில் அதிகமாக பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அ

தேபோல் நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலும் ஒமைக்ரொனின் புதிய மாறுபாடு விரைவில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி ஒமைக்ரொன் மாறுபாடு மூன்று துணை திரிபுகளை கொண்டுள்ளது.

பிஏ-1, பிஏ-2 மற்றும் பிஏ-3 என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரொனின் புதிய மாறுபாடு காரணமாக கொவிட் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here