இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வு தொடர்பில் போரிஸ் ஜோன்சனின் அறிவிப்பு

0

இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகள் நீக்குவது தொடர்பில் போரிஸ் ஜோன்சன் திங்கட்கிழமை அன்று அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வர்ரும் ஜூலை 19 பிரித்தானியா இயல்பு நிலைக்கு திரும்பும் என்று பெருவாரியான மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் முன்னதாக அவ்வாறு செய்வது பாதுகாப்பானதா என்பதை மதிப்பிடுவதற்கு இந்த வாரம் உறுதி செய்யப்பட்ட பாதிப்புகள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் குறித்த தரவுகளை பிரதமர் ஆய்வு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திங்கட்கிழமை முக்கிய முடிவெடுப்பதற்கான கூட்டம் முன்னெடுக்கப்படும்.

அதன் பின்னர் அந்த முடிவை பிரதமர் ஜோன்சன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என பிரதமருக்கான செய்தித் தொடர்பாளர் விளக்கியுள்ளார்.

இதனிடையே ஜூலை 5 ஆம் திகதி இரவு அனைத்து கட்டுப்படுகளையும் நீக்கும் சூழலில் நாடு தற்போது இல்லை என மூத்த அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிடம் தடுப்பூசி தீவிரப்படுத்துவதன் மூலம் தற்போது கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு காரணமாக அமையும் என சில நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here