இங்கிலாந்தின் வெற்றி…. 20 பேருக்கு நேர்ந்த கதி

0

யூரோ 2020 அரையிறுதி புதன்கிழமை இடம்பெற்றது.

டென்மார்க்கை எதிர்த்து இங்கிலாந்து விளையாடியதில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் டென்மார்க்கை எதிர்த்து இங்கிலாந்தின் 2-1 என்ற வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் லண்டனில் கூடியிருந்த நிலையில் அவர்களில் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

1966 உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் நாடு முதல் பெரிய இறுதிப் போட்டியை எட்டியதை ரசிகர்கள் லண்டனின் பெரும் தெருக்களில் கொண்டாடினர்.

மத்திய லண்டனில் உள்ள பிக்காடில்லி சர்க்கஸில் ரசிகர்கள் வீதிகளின் போக்குவரத்துக்களை தடுத்து தொலைபேசி பெட்டிகளுக்கு சேதம் விளைத்த வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச் சொத்துக்கு சேதம், பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here