இங்கிலாந்தின் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்….! சிரமத்தில் பயணிகள்!

0

இங்கிலாந்தின் ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வரை ராணியின் உடல் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர், ராணியின் சவப்பெட்டி அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கிற்காக அருகிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில், லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

மறைந்த ராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தின் முடிவில் 2 நிமிட மவுன அஞ்சலி கடைபிடிக்கப்படும்.

அப்போது லண்டனில் விமான சத்தத்தால் ஒலி இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே திங்கட்கிழமை அன்று 50 விமானங்களை குறுகிய தூரத்திற்கு ரத்து செய்துள்ளது.

அதே நேரத்தில் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் நான்கு அமெரிக்க விமானங்களை ரத்து செய்துள்ளது.

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் காலை 11:40 மற்றும் மதியம் 12:10 மணி வரை 30 நிமிடங்களுக்கு விமானம் எதுவும் இயக்கப்படாது.

இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான பயணிகளை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் சிரமத்திற்கு விமான நிலையம் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here