இங்கிலாந்தின் நார்ஃபோக் நகரில் ரயில் போக்குவரத்து பாதிப்பு!

0

இங்கிலாந்தின் நார்ஃபோக் நகரில் ரயில் தண்டவாளத்தில் ராட்சத ஆமை சிக்கியுள்ளது.

அதனால் சுமார் இரண்டு மணித்தியாலம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்கிழக்குப் பகுதியில் உள்ள நார்விச் நகருக்கும் மற்றும் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கும் இடையே, ரயில் தண்டவாளத்தில் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வெளியேறிய கிளைட் என்று பெயரிடப்பட்ட ஆமை சிக்கிக் கொண்டது.

இந்நிலையில் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, 2 மணி நேரம் காத்திருந்தன.

காயமடைந்த ஆமையை அங்கிருந்து தூக்கிச் சென்ற வனவிலங்கு நிபுணர் குழுவினர், அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here