கொரோனா தொற்று உலகளவில் தீவிரமடைந்த வருகின்றது.
இந்நிலையில் உலகளவில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதனால் கட்டாய தடுப்பூசி யோசனைக்கு ஆஸ்த்திரிய (Austria) நாடாளுமன்றத்தின் கீழ் சபை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்டம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதற்கமைய, கட்டாய தடுப்பூசி சட்டத்தைக் கொண்டுவரும் முதல் ஐரோப்பிய நாடாக ஆஸ்த்திரியா மாறவுள்ளது.
இதுவரை 72 சதவீதமான ஆஸ்திரியர்கள் கொவிட் தடுப்பூசியினை பெற்றுள்ளனர்.
அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் 3,600 யூரோ அபராதம் விதிக்கப்படவுள்ளது.
குறித்த கட்டாய தடுப்பூசி சட்டம் எதிர்வரும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அமுலில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.