ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0

ஆஸ்திரேலியாவின் கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 9.15 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் முதலான பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வு காரணமாக கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here