ஆழ்துளை கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன்!

0

ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில் ஷொகாக் எனும் கிராமத்தில் 33 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் வீழுந்துள்ளான்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதர் என்ற 9 வயதான குறித்த சிறுவன்,ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த சிறுவனை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,சுமார் 45 மணித்தியாலங்களுக்கு மேலாக அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுவனை மீட்பதற்கு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்துழை கிணற்றுக்குள் சிக்கிக் கொண்ட சிறுவனுடன் அவரது தந்தை உரையாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

அந்த சிறுவனை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, மொரோக்கோவில் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட ரயான் அவ்ரம் என்ற 5 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார்

இச்சிறுவன் சுமார் ஐந்து நாட்களாக குறித்த ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

எனினும் முயற்சி பலன் அளிக்காததால் குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here