ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்!

0

இந்தியாவில் ஆக்ரா அருகே உள்ள தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

14 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமது தந்தையினால் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலேயே குறித்த சிறுவன் விழுந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது முதல் குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அத்துடன், நாம் கேட்கும் கேள்விகளுக்கு சிறுவன் பதிலளித்து வருகின்றான் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here