ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுவன்! பரபரப்பு சம்பவம்…

0

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் – உமாரியாவில் பதார்ச்சத் கிராமத்தில் வீட்டின் அருகே 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

இச்சிறுவன் அருகில் மூடப்படாமல் இருந்த 200 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

சம்பவமறிந்து உடனடியாக வந்தமாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மாவட்ட அதிகாரிகள் உள்பட பலரும் சிறுவனை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

கிணற்றில் 40 அடியில் சிக்கியுள்ள சிறுவனுக்கு ஆழ்துளைக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் சிறுவனை அடைய அந்த கிணற்றுக்கு அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here