ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டியை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி…..!

0

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாவட்டம் காசிப்பூர் பகுதியில் பாய்ந்து ஓடும் கங்கை ஆ்ற்றில் பிறந்த 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மரப்பெட்டியில் மிதந்து வந்துள்ளது.

ஆற்றங்கரையோரம் படகில் இருந்த நபர் ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டும் அக்கம் பக்கம் சுற்றிப்பார்த்துள்ளார்.

அப்போது ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

துணியால் மூடப்பட்டிருந்த அந்தக் குழந்தையுடன் சில இந்துக் கடவுளின் புகைப்படங்களும், குழந்தையின் பிறந்த ஜாதகமும் அந்த மரப்பெட்டியில் இருந்துள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

உடனடியாக குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

கங்கை நதியில் கிடைத்ததால், காப்பக ஊழியர்களால் கங்கா என்று குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த பெண் குழந்தையை உத்தரப்பிரதேச அரசு தத்து எடுத்துக் கொள்வதாகவும் அதன் வளர்ப்பை உறுதி செய்வதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here