ஆற்றில் நீச்சலடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி

0

ஒன்ராறியோவின் நோர்வால் பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் நீச்சலடித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கியதாக ஹால்டன் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

இது தொடர்பில், பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், நோர்வால் பகுதியில் உள்ள Credit நதியில் நடந்துள்ளது.

Credit நதியில் அமைந்துள்ள பாலத்தில் இருந்து குறித்த 14 வயது சிறுவனும், அவரது நண்பர்களும் குதித்து விளையாடியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் சிறுவன் நீரில் மூழ்கியதாகவும், மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் மீட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சுமார் 5 மணியளவில் பொலிசார் செல்லும் போது,

மருத்துவ உதவிக்குழுவினரும் அப்பகுதி மக்களில் சிலரும், சிறுவனின் நண்பர்களும் சூழ்ந்து கொண்டு சிறுவனின் உயிரை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவனை உடனடியாக ஜார்ஜ்டவுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுவன் தொடர்பில் அதிகாரிகளால் அடையாளம் காணப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், அவரது மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் உரிய விசாரணைக்கு பின்னரே தகவல் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here