ஆறாவது மாடியிலிருந்து குழந்தையை மிரட்டிய பெண்ணிற்கு நேர்ந்த கதி

0

ரஷ்யாவில், அழுதுகொண்டிருந்த தன் மகளை பயமுறுத்துவதற்காக, குழந்தையை ஆறாவது மாடியிலிருந்து தூக்கி போட்டுவிடுவதுபோல விளையாட்டாக குழந்தையின் தாயாகிய Anna Ruzankina (23) மிரட்டியிருக்கிறார்

Anastasia என்ற அந்த மூன்று வயது குழந்தை, அம்மா, எனக்கு பயமாக இருக்கிறது என்று கதறும் காட்சிகள் அடங்கிய வீடியோவை பொலிசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.

அழும் தன் குழந்தையை மிரட்ட, அதை அதன் சட்டையைப் பிடித்துத் தூக்கி ஆறாவது மாடியிலிருந்து போட்டுவிடுவதுபோல பாவனை காட்டியிருக்கிறார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக குழந்தையின் சட்டை கிழிந்துள்ளது.

அதன்பின் குழந்தை 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளது.

அதற்குப் பிறகு குழந்தையைத் தூக்க ஓடியிருக்கிறார் Anna.

ஆனால், குழந்தை அதற்குள் உயிரிழந்துள்ளது.

கீழே விழுந்த குழந்தையை தூக்க Anna லிப்டில் செல்லும் காட்சிகளும், இறந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர் மீண்டும் லிப்டில் பயணிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், Anna இரவு விடுதிக்கு சென்று குடித்துவிட்டு வந்தது தெரியவந்துள்ளது.

குழந்தையைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் Anna கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 21 ஆண்டுகள் சிறையில் செலவிட நேரிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here