ஆரோக்கியமான வாழ்க்கை முறை வேண்டுமா?

0

ஆரோக்கியமான உடல் மற்றும் சாந்தமான மனம், இவை இரண்டும் ஒன்றுசேர பெற்றவர்களின் வாழ்க்கை முறை நிச்சயமாக ஹெல்தியான லைஃப்ஸ்டைலாக இருக்கும். ஆனால், இந்த இரண்டும் உடனடியாக உங்களுக்கு கிடைத்துவிடாது. அதற்காக ஒருசில வழிமுறைகளை கடைபிடித்து உங்களை நீங்கள் முதலில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும். மனதுக்கும் உடலுக்கு நல்ல செயல்கள் எது என்பதை தேர்ந்தெடுத்து அதனை நாள்தோறும் செய்ய வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் ஆகியவை உடல் நலனுக்கு மிகவும் தீங்கானது என்பதால், அதற்கு ஒருபோதும் அடிமையாக இருக்கக்கூடாது.

ஹெல்தியான லைஃப்ஸ்டைலில் வாழும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நோய் நோடிகள் உங்களை பாதிக்காது. அந்தவகையில் நாள்தோறும் நீங்கள் கடைபிடிக்க முக்கியமான சில வழிமுறைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

ஒவ்வொருவரும் அன்றாடம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிலர், நாள்தோறும் கடினமான வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி தேவையில்லை என நினைக்கின்றனர். ஆனால், அனைவரும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். உங்கள் கடினமான வேலையையும் சிறப்பாக செய்ய பிட்னஸாக இருந்தால் மட்டுமே முடியும் என்பதால், உடற்பயிற்சியை செய்வதை தவிர்க்காதீர்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்களின் வாழ்க்கை தரத்தை ஆரோக்கியமானதாக மாற்றும்.

மன அழுத்தம் கூடாது

அதிகப்படியான மன அழுத்தம் உங்களின் மன நிலையை பாதிக்கும் என்பதால் அவற்றை முடிந்தளவுக்கு தவிர்க்க பழக வேண்டும். உங்கள் மன நிலையை எப்போதும் மகிழ்ச்சியானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மனநிலை பாதிக்க ஆரம்பித்தால், அவை உடல் நிலை ஆரோக்கியத்திலும பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தையை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். யோகா செய்வது, இசை கேட்பது, நீண்ட தூரம் பயணிப்பது, நண்பர்களுடன் உரையாடுவது உள்ளிட்டவை மன அழுத்தங்களை குறைக்கும்.

also read : நீங்கள் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினலா என்பதை கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ..

காலை உணவு தவிர்க்காதீர்

காலை உணவை ஒருபோதும் தவிர்க்க கூடாது. எத்தகைய சூழ்நிலைகளிலும் காலை உணவை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். காலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவில் இருந்து தான் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகளவில் உறிஞ்சப்படுவதால், இதில் எப்போதும் கூடுதல் கவனமாக இருங்கள்.

ஆழ்ந்த தூக்கம்

ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையான ஒன்று. ஒரு சிலர் கண்மூடி தூங்கினால் மட்டுமே போதும் என நினைக்கின்றனர். அப்போது, மனதில் பல வகையான சிந்தனைகள் மனதில் ஒடிக்கொண்டு இருக்கும். அதனை தவிர்த்து, எந்த சிந்தனைகளும், யோசனைகளும் இல்லாத ஆழ்ந்து தூங்குவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மனநிலை மற்றும் உடல் நலனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இரவு நேரத்தில் விழித்திருப்பதை தவிர்த்து, தூங்க பழகிக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு

ஹெல்தியாக இருக்க வேண்டுமென்றால் ஹெல்தியான உணவுகளை உண்ண வேண்டும். கீரை, பழங்கள், பயிறு வகைகள் என உணவுகளை பட்டியலிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணவுகளை உண்ணும்போது, நம் உடலுக்கு தேவையான சத்துகள் போதுமான அளவில் கிடைத்து, ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எண்ணெய் பலகாரங்கள், சில்லி சிக்கன் போன்றவற்றை முடிந்தளவுக்கு தவிர்ப்பது நல்லது.

நோய்களை வரும்முன் காப்பது சாலச்சிறந்தது. இல்லையென்றால் நோய்களால் பாதிக்கப்பட்டு, அதனால் கடுமையான அவதிகளை எதிர்கொள்ள நேரிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here