ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி திட்டம்..!

0

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம், தன் புதுப்புது தயாரிப்புகளால், வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது.

ஆப்பிள் தயாரிப்புகளை, உலகம் முழுதும் பலகோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம், 2001 அக்டோபர் 23ல், ஐ – பாட் சாதனத்தை அறிமுகம் செய்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்க முடியும்.

பின் 2007ல்,ஐ – பாட் டச் எனப்படும், பெரிய தொடு திரையுடன் கூடிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2019ல், ஐ – பாட் டச், ஏழாம் தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ – பாட் தயாரிப்புகளை நிறுத்துவதாக, ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், ஆப்பிள் ஸ்டோர்களில், இருப்பில் உள்ள ஐ – பாட்களை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here