ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

0

ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

அதில் மரணித்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க புவிசரிதவியல் தரவுகளின்படி, 4.9 மெக்னிடியூட் மற்றும் 5.3 கெ;னிடியூட் அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இதன்காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதோடு, இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்களில் 4 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்தநிலையில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here