ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

0

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250க்கும் அதிகமாக இருக்கும் என உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து 44 கிமீ (27 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் 500 கிலோமீற்றருக்கும் அதிகமான நில நடுக்கம் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, நேற்றிரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது அதிகாலையில் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, சுமார் 51 கிமீ ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here