ஆபாச பட வழக்கில் தீவிரமடையும் விசாரணை….

0

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்தது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான் நடந்ததா?, அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் சமீபத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போதைய தருணத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது ராஜ்குந்த்ராவின் பண பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு செய்ய மும்பை குற்றப்பிரிவு போலீசார் நிதி தணிக்கையாளர்களை நியமித்து உள்ளனர்.

இந்தக் குழுவின் தணிக்கை வளையத்தில் ராஜ்குந்த்ராவின் வயான் இண்டஸ்ட்ரீஸ், ஆபாச படம் வெளியிட்டு மோசடி செய்த நிறுவனத்தின் கணக்கு மற்றும் ஷில்பா ஷெட்டி இயக்குனராக செயல்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்கு ஆகியவையும் அடங்கும். ஆபாச பட தொழில் மூலம் ராஜ்குந்த்ராவிற்கு வெளிநாட்டில் இருந்தும் பணம் கிடைத்து உள்ளது. அது ஷில்பா ஷெட்டியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் கிடைக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் போலீசாரின் கழுகு பார்வை ஷில்பா ஷெட்டி மீதும் விழுந்து உள்ளது. இதன் காரணமாக ஷில்பா ஷெட்டி மீது வலுவான ஆதாரங்கள் ஏதேனும் சிக்கினால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here