ஆபாச படங்களை தயாரித்த குற்றச்சாட்டில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது!

0

பிரபல பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்த குற்றச்சாட்டில் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிவூட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி, இவர் தமிழில் பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா, மும்பையில் ஆபாச படங்களைத் தயாரித்து, அவற்றை சில தொலைபேசி செயலிகள் மூலம் விநியோகம் செய்துள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு ராஜ் குந்த்ரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால், அவரை கைது செய்துள்ளதாகவும். மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here