ஆபத்தில் சர்வதேச விண்வெளி நிலையம்?

0

ரஷ்யாவின் ஏவுகணை தாக்கி சாட்டிலைட் வெடித்ததால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் இணைய சேவை, தொலைதொடர்பு, ஜிபிஎஸ், வானிலை ஆய்வு உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்காக உலக நாடுகள் பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன. இவ்வாறாக அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு செயலிழந்து விடும். அப்போது சம்பந்தப்பட்ட நாடுகள் சில ஏவுகணைகளை அனுப்பி செயற்கைக்கோள்களை அழித்து விடுகின்றன.

ஆனால் இவ்வாறாக தகர்க்கப்படும் செயற்கைக்கோள்களின் கழிவுகள் தூசுகளாக மாறி விண்வெளியில் சுற்றி வருவது சமீப காலமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா தற்போது ஏவுகணை மூலம் அழித்த செயற்கைக்கோளின் பாகங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here