ஆபத்தான NeoCov வைரஸ்….? உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை

0
Microscopic view of Coronavirus, a pathogen that attacks the respiratory tract. Analysis and test, experimentation. Sars. 3d render

புதிய வைரஸான NeoCov ஆபத்தானதா என்பதை குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தை அச்சுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் சீன விஞ்ஞானிகள் கொரோனா குடும்பத்தில் இருந்து புதிய வகை ‘NeoCov’ வைரஸை கண்டறிந்துள்ளனர்.

இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதாக கூறப்படுகின்றது.

மனிதர்களுக்கு ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டாலும் இந்த வைரஸ் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது.

அது மட்டும் இல்லாமல் இவ்வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரில் 3 பேரில் ஒருவர் உயிரிழக்கக் கூடும் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து ‘NeoCov’ வைரஸ் குறித்து உலக சுகாதாரத்துறை தெரிவிக்கையில்,

தென்னாப்பிரிக்காவில் வாழும் வௌவால்களிடம் இருந்து ‘NeoCov’ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வைரஸால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் எப்போதுமே விலங்குகளில் இருந்து தான் மனிதனுக்கு பரவுகிறது.

ஆய்வுகளின் அடிப்படையில் ‘NeoCov’, Covid 19 வைரஸ் போலவே மனித உடலில் ஊடுருவ கூடியது.

இந்த வைரஸ் இன்னும் ஒருமுறை உருமாறினால் கூட அது மனிதர்களைத் தாக்கும் திறன் பெற்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here