ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!

0

இந்தியாவில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

இதனால் அருவி மற்றும் நீரோடைகளில் நீர்வரத்தும் அதிகமாக காணப்படுகிறது.

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய‌ன் (28) என்ற இளைஞர் கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு ம‌லைக்கிராம‌ப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

அவர் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது பாறை சரிவுகளில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் த‌வறி அருவியின் ப‌ள்ள‌த்தாக்கு ப‌குதியில் விழுந்து மாய‌மாகியுள்ளார்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here