ஆபத்தான நிலையில் கொழும்பு! அதிரச்சியை ஏற்படுத்திய நிபுணர்

0

டெல்டா மாறுபாடு காரணமாக கொழும்பின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அனேகமான மக்கள் பாதிக்கப்படுவதையே நாங்கள் பார்க்கின்றோம், என கொழும்பு மாநகரசபையின் தொற்றுநோயியல் நிபுணர் டினுகுருகே தெரிவித்துள்ளார்.

டெல்டா மாறுபாடு காரணமாக கொழும்பின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள அவர் சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் அனேகமானவர்கள் நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அனேகமான மக்கள் பாதிக்கப்படுவதையே நாங்கள் பார்க்கின்றோம், குறிப்பாக தொழில்களிற்கு செல்லும் நடுத்தர வயதினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் எனவும் டினுகுருகே தெரிவித்துள்ளார்.

ஒருவர் அவ்வாறான சூழ்நிலையில் வெளியில் சென்று நோயாளியானால் முழுக்குடும்பமும் பாதிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினையிதுவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலருக்கு அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால் அவை ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்வதில்லை என தெரிவித்துள்ள தினுகுருகே இதன் காரணமாகவே முடக்கல் நிலையின் போதும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தன எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது மிக அதிகளவு பரவல் காணப்படுகின்றது. நாங்கள் இதனை கட்டுப்படுத்த முயல்கின்றோம். நாங்கள் மக்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்கும் அல்லது தனித்து வைத்திருப்பதற்கும் முயல்கின்றோம்.

இதன் மூலம் நிலைமை கையை மீறி போகாத நிலையை உறுதி செய்ய முயல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here