ஆபத்தான நிலைக்கு செல்லும் உலக நாடுகள்! WHO கருத்து

0

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் Omicron வைரஸ் தொடர்பில் உலக சுகாதாரத்துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

நாடுகள் அனைத்தும் மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்தி கொள்ளவேண்டும்.

மேலும் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனிடையில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிப்பது பலனளிக்காது என தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களை தடை செய்த ஆஸ்திரேலியாவில் புதிய வகையாக உருமாறிய கொரோனாவின் பாதிப்புகள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் ஆசிய மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகளிலும் அதிவேகமாக பரவி வருகிறது.

ஒமிக்ரான் வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாது என்பதையும் தெரியப்படுத்தியுள்ளது.

ஆகவே மக்கள் பயமடைய வேண்டாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here