ஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…!

0

தெற்கு கலிபோர்னியா கடற்கரை நகரத்தில் தெருக்களில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு விஷம் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சான் ஆண்ட்ரியாஸைச் சேர்ந்தவர் William Cable (38).

William Cable கடந்த மே மாதம், ஹண்டிங்டன் கடற்கரையில் வீடற்ற மக்களுக்கு oleoresin capsicum எனும் மிகவும் காரமான மிளகாயை கொண்ட உணவைக் கொடுத்துள்ளார்.

இந்த மிளகாய் பொலிசார் பயன்படுத்தும் பெப்பர் ஸ்பிரேவை விட இரண்டு மடங்கு வலிமையானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிலருக்கு அவர்கள் “காரமான உணவு சவாலில்” பங்கேற்பதாகக் கூறப்பட்டதாகவும், ஒரு சிலருக்கு முன்கூட்டியே எதுவும் எச்சரிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது அவர்களில் 8 பேருக்கு நச்சு கலந்த வேறு உணவு மற்றும் பீர் வழங்கப்பட்டுள்ளது.

அதனை சாப்பிட்ட மக்களுக்கு வலிப்பு போன்ற அறிகுறிகள், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி மற்றும் தீவிர வாய் மற்றும் வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டுள்ளது.

சிலர் தீவிரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டனர்.

William Cable அந்த ஆதரவற்ற மக்களை சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்திக்கொண்டதாகவும், விஷம் அருந்திய அவர்களின் வலியை வீடியோவாக பதிவு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் William Cable-ஐ ஜூன் மாதம் கைது செய்தனர்.

விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் Cable 19 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here