பரத், சந்தியா நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’காதல்’ திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார் நடிகர் விருச்சியகாந்த். இவர் தற்போது ஆட்டோவில் கண் திறந்த நிலையில் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மிகப்பெரிய வெற்றி பெற்ற ’காதல்’ திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் விருச்சியகாந்த் நடித்து இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற இவர் பேசிய வசனம் பிரபலமானது. அந்த வசனத்தில், ‘ஜோசியக்காரன் சொன்னார், விருச்சிகத்தையும் காந்தத்தையும் சேர்த்தால் பெரிய ஆளாக ஆவீர்கள் என்று, அதனால் தான் என்னுடைய பெயரை விருச்சியகாந்த் என்று மாற்றி விட்டேன். இனி நான் கண்டிப்பாக ஹீரோவாக வருவேன். நடித்தால் ஹீரோவாக நடிப்பேன், அதன்பின் அரசியல், சிஎம், அப்புறம் டெல்லி’ என்று ஒரு வசனத்தை பேசி இருப்பார்
இந்த வசனம் மிகப்பெரிய வைரல் ஆனது என்பதும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு பேருதவியாக இருந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விருச்சியகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிச்சை எடுத்ததாகவும் இதனைப் பார்த்த பலர் அவருக்கு உதவி செய்ததாகவும் செய்திகள் வெளியானது. அதன் பின்னரும் அவருடைய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல், கோவில்களில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. தற்போது அவர் ஒரு ஆட்டோவில் பரிதாபமாக கண் திறந்த நிலையில் மரணம் அடைந்து இருக்கும் காட்சி பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.