ஆட்சியை விட்டுவிடுமாறு கோரிக்கை வைத்த கோட்டாபய ராஜபக்ஷவின் மகன்!

0

இலங்கை அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதல்வரான மனோஜ் ராஜபக்ஷ, தனது தந்தையிடம் முன்வைத்த விசேட கோரிக்கை பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய, தற்போது அவரது மகனது குடும்பத்தாருடன் இருக்கின்றார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் நாடு திரும்பவுள்ளார்.

இந்நிலையில் அவர் அமெரிக்கா சென்ற நாளிலிருந்து அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ விசேட வேண்டுகோளினை முன்வைத்து வருவதாக அறியமுடிகின்றது.

அதாவது, அரசாங்கத்தையும் ஆட்சியையும் சரிவர நடத்திச் செல்ல முடியாதவாறு குடும்ப அங்கத்தவர்களே தந்தையின் காலைப்பிடித்து இழுத்தால் ஆட்சியை ஒப்புக் கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கே வந்துவிடும்படியும் மனோஜ் ராஜபக்ஷ கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here