ஆசிரியர் போராட்டம் முடியும் திகதி அறிவிப்பு

0

பாராளுமன்றத்தில் நாளை (12) சமர்ப்பிக்கப்படும் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதன் பின்னரே, தமது போராட்டம் கைவிடப்படும் என ஆசிரியர் − அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துக்கொண்டு கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஆசிரியர் − அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் நேற்று (11) இணக்கம் வெளியிட்டிருந்தனர்.

சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் 30 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here