ஆசிரியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

0

ஆசிரியர் – அதிபர்களுக்கான 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாத்திரம் செப்டெம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here