ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது! அமைச்சர் அறிவிப்பு

0

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு 56 பில்லியன் ரூபா செலவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரச்சினை கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட பிரச்சினை எனவும் குறித்த விடயத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பரிசீலிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து தொழிற்சங்கத் தலைவர் களுக்குத் தெரிவிக்கப்படும்.

நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் தற்சமயம் 56 பில்லியன் ரூபா நிதியைச் செலவழிக்க இயலாது.

போராட்டங்களை நடத்தத் தொழிற்சங்கங்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசாங்கம் தடுக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here