ஆசிய கிண்ணம் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

0

15-வது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதனையடுத்து, முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்தது.

அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஹசரங்கா டி சில்வா 36 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 28 ஓட்டங்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது.

இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ஓட்டங்களில் அவுட்டானார்.

இப்திகார் அகமது 32 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

அத்துடன் 6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here