ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி தொடர்பில் புதிய ஆய்வு….

0

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பை அளிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி, வைரஸை உடைக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றது.

புதிய வகை வைரஸ்களை கூட கொல்லக்கூடிய டி-செல்களை உருவாக்குகிறது.

ஆன்டிபாடிகள் குறைந்து நீண்ட காலத்திற்குப் பிறகும், உடல் T-Cells எனும் இந்த முக்கிய உயிரணுக்களைத் தொடர்ந்து உருவாக்க முடியும்.

அதுவும் வாழ்நாள் முழுவதும் உருவாக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது,

டி-செல் பாதுகாப்பு என்பது ஆக்ஸ்போர்டு மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற அடினோவைரஸ் தடுப்பூசிகளின் “முக்கிய அம்சம்” ஆகும்.

இந்த டி-செல்கள் மிக உயர்ந்த அளவிலான ‘உடற்தகுதி’ கொண்டதாகத் தெரிகிறது.

டி-செல் அளவை அளவிடுவது கடினம், ஆனால் இந்த புதிய ஆய்வு அவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கினற்னர்.

இந்த ஆக்ஸ்போர்டு மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளின் இறுதி குறிக்கோள் ஆன்டிபாடிகள் மற்றும் டி-செல்கள் இரண்டையும் பயன்படுத்தி நீண்டகால நோயெதிர்ப்பு மண்டல பாதுகாப்பைத் தூண்டுவதாகும்.

ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைக் காட்டிலும் டி-செல்களை உருவாக்குவதில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here