பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன்.
இதனிடையே தேசிய சுகாதார சேவையின் 54 வயதான தலைவரான சர் சைமன் ஸ்டீவன்ஸ் வியாழக்கிழமை தனது முதல் டோஸைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார்.
அத்துடன் பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இன்று வெள்ளிக்கிழமை தடுப்பூசி பெறுவதாகவும் ஸ்லோவேனியாவின் பிரதமர் மற்றும் ஐரோப்பிய மருந்துகள் முகமை நிர்வாக இயக்குனர் எமர் குக் ஆகியோரும் தடுப்பூசி பெறுவதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
அனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகளை மீள தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.