அவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிட்னியின் வடமேற்கின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கட்டளையிடப்பட்டது.
வேகமாக செல்லும் வெள்ளப்பெருக்கு அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் 4,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.