அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றிபெற்ற இலங்கையர்…..

0

இலங்கையில் பிறந்தவரும் சமையற் கலைஞருமான கசாண்ட்ரா ஃபெர்னாண்டோ அவுஸ்திரேலிய பெடரல் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் Holt பகுதியிலேயே இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

11 வயதில் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார் கசாண்ட்ரா ஃபெர்னாண்டோ.

அன்றிலிருந்து மெல்போர்னின் தென்கிழக்கு பகுதியை தமது இல்லமாகவே அவர் பாவித்து வந்துள்ளார்.

இளம் வயதிலேயே அவர் வூலிஸ் டான்டெனாங் பிளாசாவில் வேலை செய்யத் ஆரம்பித்துள்ளார்.

மேலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பேக்கிங் சமையற் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே தொழிற் கட்சி சார்பாக தேர்தல் களம் கண்ட கசாண்ட்ரா ஃபெர்னாண்டோ தம்மை எதிர்த்து போட்டியிட்ட இன்னொரு இலங்கையரான Ranj Perera தோர்க்கடித்து நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் இலங்கை வம்சாவளி பெண் இவர்.

மொத்தம் பதிவான வாக்குகளில் 57.5% வாக்குகள் பெற்று கசாண்ட்ரா ஃபெர்னாண்டோ சாதனை புரிந்துள்ளார்.

Cassandra Fernando becomes first woman of SL descent elected to Australian  Parliament

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here